Random image

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் – சற்று வலுவான நிலையில் இலங்கை!

காலே: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில், முதலில் பேட்டிங் செய்துவரும் இலங்கை அணி, முதல்நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்களை எடுத்துள்ளது.

டாஸ் வென்ற இலங்கை பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் துவக்க வீரர் லஹிரு திரிமன்னே 43 ரன்களை அடித்தார். ஏஞ்சலோ மேத்யூஸ் 107 ரன்களை விளாசி நாட்அவுட்டாக உள்ளார்.

கேப்டன் தினேஷ் சந்திமால் 52 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். நிரோஷன் டிக்வெல்லா 19 ரன்களுடன் களத்தில் உள்ளார். முதல்நாள் ஆட்டநேர முடிவில், 87 ஓவர்கள் பேட்டிங் செய்த இலங்கை அணி, 4 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்களை எடுத்துள்ளது.

இங்கிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

 

You may have missed