இலங்கை: மது விருந்தில் ஆண், பெண் அதிகாரிகள்!

 

கொழும்பு:

து விருந்து ஒன்றில்  ஆண், பெண் அரசு அதிகாரிகள் கலந்து கொண்ட ஒளிப்படங்கள் வெளியாகி, இலங்கையில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அரசு ஆண், பெண் அதிகாரிகளுக்கு மது விருந்து அளிக்கப்பட்டது. மதுவின் தீமை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அதிகாரிகளே இப்படி மதுவிருந்தில் கலந்துகொள்ளலாமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆண் அதிகாரிகளோடு பெண் அதிகாரிகளும் இந்த விருந்தில் கலந்துகொண்டது இன்னமும் அதிர்ச்சி அளிக்கிறது. கலாச்சாரத்தை வலியுறுத்த வேண்டிய, போதிக்க வேண்டிய அரசு அதிகாரிகளே இப்படி நடந்துகொள்ளலாமா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.