இலங்கை : நாடாளுமன்ற தேர்தல் பணிகள் நிறுத்தி வைப்பு

கொழும்பு

லங்கை தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைத்துள்ளது.

இலங்கையில் நடந்த அரசியல் குளறுபடிகளில் ஒரு கட்டமாக அதிபர் சிறிசேனா இலங்கை பாராளுமன்றத்தை கலைத்தார். அதை ஒட்டி பாராளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளை இலங்கை தேர்தல் ஆணையம் ஆரம்பித்தது.

இலங்கை பாராளுமன்ற கலைப்பை எதிர்த்து அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் நேற்று உச்சநீதிமன்றம் பாராளுமன்ற கலைப்புக்கு வரும் 19 ஆம் தேதி வரை இடைக்கால தடை அளித்துள்ளது.

வழக்கின் அடுத்த கட்ட விசாரணை நடைபெற உள்ளதால் இலங்கை தேர்தல் செயலர் மகிந்த தேசப்பிரிய நாடாளுமன்ற தேர்தல் நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் நிறுத்தி உள்ளாதாக அறிவித்துள்ளார்.