பரபரப்பான நிலையில் வரும் வெள்ளி அன்று இலங்கை நாடாளுமன்ற கூட்டம்

கொழும்பு

ரும் வெள்ளிக்கிழமை இலங்கை நாடாளுமன்றத்தை கூட்ட சபாநாயகர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இலங்கையில் தற்போது அரசியல் மிகவும் பரபரப்புடன் காணப்படுகிறது.   பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவி நீக்கம் செய்யப்பட்டு  புதிய பிரதமராக முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சே பதவி ஏற்றுள்ளார்.   அதற்கு ரணில் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

ரணில் விக்ரமசிங்கே ஆதரவாளரான அமைச்சர் திடீரென  கைது செய்யப்பட்டது சர்ச்சையை அதிகரித்துள்ளது.   இந்நிலையில் மகிந்தா ராஜபக்சேவை எதிர்க்கட்சி தலைவர் சம்மந்தன் சந்தித்துள்ளார்.   ராஜபக்சேவுக்கு ஆதரவு அளிக்க அவர் நிபந்தனைகள் விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

இன்று அரசியல் தலைவர்களின் கூட்டம் ஒன்று நடந்தது.  அதில் பேசிய இலங்கை சபாநாயகர் வரும் வெள்ளிக்கிழமை அன்று பாராளுமன்றத்தை கூட்ட தாம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.   இது குறித்து அவர் அதிபருக்கு தகவல் அளிக்க உள்ளதாகவும் அப்போது கூறி உள்ளார்.

இந்த கூட்டத்தை இலங்கை மட்டுமின்றி உலகமே கூர்ந்து கவனித்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.