கொழும்பு:

புத்திஸ்டுகள் அதிகம் உள்ள லடாக் இந்தியாவின் ஒரு மாநிலமாக மாறும், இது புத்திஸ்டுகள் பெரும்பான்மையாக இருக்கும் முதல் மாநிலமாக இருக்கும்  என்று இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்து உள்ளார்.

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவு 307, 35ஏ   பிரிவுகளை நீக்கி நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

இதையடுத்து, ஜம்மு – காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்படுகிறது. சட்டப்பேரவை கூடிய  யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீரும், சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக்கும் இருக்கும் என அறிவித்தார்.

மத்திய அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு கட்சிகள் ஆதரவும், காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றன.

இந்த விவகாரம் உலகம் முழுவதும் எதிரொலித்துள்ள நிலையில், இந்தியா பாகிஸ்தான் இடையே மீண்டும் பதற்றம் உருவாகி உள்ளது.

இந்த நிலையில், இலங்கை பிரதமர் காஷ்மீர் விவகாரம் குறித்து டிவிட் பதிவிட்டுள்ளார்.

அதில், லடாக் ஒரு இந்திய மாநிலமாக மாறும். லடாக்கின் மக்கள் தொகையில் 70 சதவிகிதம் பேர்  புத்தமதத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். இதன் காரணமாக புத்த மதத்தினர் பெரும்பான்மை கொண்டமுதல்   மாநிலமாக லடாக் இருக்கும் என்று தெரிவித்து உள்ளார்.

மேலும்,  லடாக் ஒரு அழகான பகுதி என்றும், லடாக் உருவாக்கம் மற்றும் அதன் மறுசீரமைப்பு என்பது இந்தியாவின் உள்நாட்டு  விஷயம் என்றும் தெரிவித்து உள்ளார்.