இலங்கையில் அதிகரிக்கும் அரசியல் குழப்பம் : அதிபரின் பொறுப்பில் காவல்துறை

கொழும்பு

டும் அரசியல் குழப்பங்களுக்கிடையே இலங்கையில் நேற்று  புதிய மந்திரிசபை பதவி ஏற்பு விழா நடந்துள்ளது.

இலங்கையில் தொடர்ந்து அரசியல் குழப்பம் நிலவி வருகிறது.   அதிபர் சிறிசேனா கட்ந்த அக்டோபர் 26 ஆம் தேதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வை பதவி நீக்கம் செய்தார்.  அவருக்கு பதிலாக முன்னாள் அதிபர் ராஜபக்சேவை அவர் பிரதமர் ஆக்கினார்.   அதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் அதிபர் நாடாளுமன்றத்தை கலைத்தார்.

உச்சநீதிமன்றம் அதற்கு தடை செய்ததால் ராஜபக்சே பதவி விலகி கடந்த 16 ஆம் தேதி ரணில் மீண்டும் பிரதமர் ஆனார்.    அதைத் தொடர்ந்து நேற்று ரணில் விக்ரமசிங்கே வின் ஐக்கிய தேசிய முன்னணியை சேர்ந்த 29 பேர் அடங்கிய அமைச்சரவை பதவி ஏற்றுக்  கொண்டுள்ளது.

இதில் மற்றொரு குழுப்பமாக பாதுகாப்பு மற்றும் காவல் துறையை அதிபர் சிவசேனா தம்மிடமே வைத்துக் கொண்டுள்ளார்.    இதற்காக ரணில் விக்ரமசிங்கே சிபாரிசை நிராகரித்துள்ளார்.  தாம் அமைச்சரவையின் தலைவர் என்னும் முறையில் இந்த பொறுப்புக்களை அவரே நிர்வகிக்க முடிவு செய்துள்ளார்.