கொழும்பு

லங்கை அதிபர் தேர்தல் வரும் நாம்பர் 15 க்கு பிறகு டிசம்பர் 7 க்குள் நடைபெறும் என இலங்கை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் தற்போது அதிபராக மைத்ரிபால சிறிசேன பதவி வகித்து வருகிறார். இலங்கை பிரதமாரக ரணில் விக்கிரம சிங்கே பதவி வகித்து வருகிறார். இருவருக்கும் இடையில் நடந்த பனிப்போரின் விளைவாக விக்கிரமசிங்கேவை சிறிசேன பதவி விலக்கினார். ஆனால் அவர் உச்சநீதிமன்ற உத்தரவின்படி நம்பிக்கை வாக்கு பெற்று மீண்டும் பதவியை அடைந்தார்.

ஆகவே சிறிசேனா பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார். அந்த உத்தரவையும் இலங்கை ரத்து செய்ததால் தற்போது விக்கிரமசிங்கே பிரதமராக நீடித்து வருகிறார். வரும் 2020 ஆம் வருடம் ஜனவரி மாதம் 8 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இலங்கை அரசியல் அமைப்பு சட்டத்தின்படி புதிய அதிபரை பழைய அதிபர் பதவி காலம் முடிவதற்கு குறைந்தது ஒரு மாதம் முன்பு தேர்ந்தெடுக்க வேண்டும்.

அதை ஒட்டி இலங்கை தேர்தல் ஆணைய தலைவர் மகிந்த தேசப்ரியா, “தற்போதைய அதிபரின் பதவிக்கால்ம் முடிவதற்கு குறைந்தது ஒரு மாதம் முன்பு புதிய அதிபர் தேர்தல் நடைபெற வேண்டும். அதன்படி நவம்பர் மாதம் 10 அன்று ஞாயிறு மற்றும் 12 ஆம் தேதி அன்று புத்த மத விழா தினமாகும்

அதனால் நவம்பர் 15 க்கு பிறகு தேர்தல் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதிபர் பதவிக்காலம் முடிவடையும் தினம் ஜனவரி 8 என்பதால் இந்த தேர்தல் டிசம்பர் மாதம் 7 க்குள் நடைபெறும். எனவே விரைவில் தேர்தல் நடைபெற உள்ள சரியான தேதி அறிவிக்கப்படும்” என தெரிவித்டுள்ளார்.