கொழும்பு

லங்கை குடியரசுத் தலைவர் தேர்தலில் தமது கட்சி கொத்தபாய ராஜபக்சேவை ஆதரித்தாலும் தாம் நடுநிலை வகிக்கப்போவதாக மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் (நவம்பர்) 16 ஆம் தேதி இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது.  இதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுணா கட்சியின் வேட்பாளரான கொத்தபாய ராஜபக்சேவை தற்போதைய ஜனாதிபதியான மைத்ரிபால சிறிசேனாவின் கட்சி ஆதரிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் மைத்ரிபால சிறிசேனா தாம் ஜனாதிபதி தேர்தலில் நடுநிலை வகிக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.  அதே வேளையில் தமது கட்சி கொத்தபாய வை ஆதரிப்பதில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதையும் அவர் தெரிவித்துள்ளார்.

கொத்தபாய ராஜபக்சே முன்பு பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பணி புரிந்த போது விடுதலைப் புலிகளை போரில் தோற்கடித்தது குறிப்பிடத்தக்கதாகும்.