டில்லியில் மாசு : முகமூடி அணிந்து விளையாடும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள்

டில்லி

டில்லியில் நிலவி வரும் கடும் மாசு காரணமாக இலங்கை கிரிக்கெட் வீரர்கள் முகமூடி அணிந்து விளையாடி வருகின்றனர்

இன்று டில்லி ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இந்தியா – இலங்கை டெஸ்ட் மேட்ச் நடைபெற்று வருகிறது.   இரண்டாம் நாளான இன்று கோலி இரட்டை சதம் அடித்து ஒரு சாதனை புரிந்துள்ளார்.   இன்று டில்லியில் கடும் மாசு நிலவி வருகிறது.

அதையொட்டி இலங்கை கேப்டன் தினேஷ் சண்டிமல் உட்பட பல இலங்கை வீரர்கள் முகமூடி அணிந்து விளையாடி வருகின்றனர்.   இது குறித்து வர்ணனையாளர்கல் சஞ்சய் மஞ்ச்ரேகர் மற்றும் ரசல் அர்னால்ட் ஆகியோர் வீரர்களை அடையாளம் காணுவது கடினமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.   மேலும் முகமூடி அணிந்து விளையாடுவது குறிப்பாக பந்து வீசுவது மிகவும் கடினமாக இருக்கும் எனவும் கூறிஉள்ளனர்.

கார்ட்டூன் கேலரி