டெல்லி: இலங்கை அரசின் புதிய வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தனே 2 நாள் அரசு முறை பயணமாக வரும் வியாழன்று டெல்லி வருகிறார்.

இலங்கை அரசியலின் மஹிந்த ராஜபக்ஷவின் நம்பிக்கை கொண்டவர்.  அமெரிக்காவிலும் நெதர்லாந்திலும் படித்த தினேஷ் குணவர்த்தனே ஒரு தொழிற்சங்கத் தலைவரும் கூட.

இலங்கையில் சோசலிசத்தின் தந்தை என்று அழைக்கப்படும் அவரது புகழ்பெற்ற தந்தை பிலிப் குணவர்தனவைப் போன்ற இவரும் ஒரு போராளி.  இந்திய சுதந்திர போராட்டத்தின் போது பெற்றோர் இங்கு சிறையில் இருந்தனர்.

விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் ஜெயபிரகாஷ் நாராயண் மற்றும் வி.கே.கிருஷ்ண மேனனின் வகுப்பு தோழராக இருந்தார். அங்கு அவர் அமெரிக்க ஏகாதிபத்தியத்திலிருந்து விடுபட வேண்டும் என்று வாதிட்டவர்.

அவரது தந்தை பிலிப் மற்றும் தாய் குசுமா ஆகியோர் 2ம் உலக போரின்போது இலங்கையிலிருந்து தப்பி இந்தியாவுக்குள் பதுங்கியிருந்தனர். சுதந்திர போராட்டக்காரர்களுடன் இணைந்த செயல்பட்டு, மும்பையில் உள்ள ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஒரு வருடம் கழித்து, அவர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டு, போர் முடிந்த பின்னரே விடுவிக்கப்பட்டனர். பிலிப், ராபர்ட், குசுமா அனைவரும் இந்தியாவின் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று, மும்பை சிறையில் இருந்ததை அவர் முக்கியமான, கவுரமான விஷயமாக கருதுகிறார்.

இன்னும் சொல்லபோனால் இந்தியாவுடனான அவர்களின் தொடர்பு கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது எனலாம். அப்படிப்பட்ட நபர், வரும் வியாழக்கிழமை 2 நாள் பயணமாக இந்தியா வருகிறார்.