ண்டன்

ங்கிலாந்து அரசியின் கவுரவ விருது இலங்கையை பூர்விகமாகக் கொண்ட தமிழ்ப்பெண்ணும் ஆங்கில பாடகியுமான மாதங்கி அருள் பிரகாஷுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

 

இலங்கையைப் பூர்விகமாகக் கொண்ட மாதங்கி அருள் பிரகாஷ் லண்டனில் பிறந்தவர் ஆவார்.   அவர் பிறந்து ஆறு மாதம் கழித்து அவரது தந்தை அருள் பிரகாஷ் மற்றும் தாயாருடன் யாழ்ப்பாணம் சென்று வசிக்க தொடங்கினார்.  அங்கு உள்நாட்டுப் போரினால் மீண்டும் இருவரும் லண்டனில் மாதங்கியுடன் திரும்பி வந்து குடியேறினார்.   பொறியாளரான அருள் பிரகாஷ் ஈரோஸ் அமைப்பின் ஆரம்பக்கால உறுப்பினர்களில் ஒருவர் ஆவார்.

வருடந்தோறும் இங்கிலாந்து அரசி எலிசபெத் பிறந்த நாளின் போது பல துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்குக் கவுரவ விருதுகள் வழங்கப்படுவது வழக்கமாகும்.  அவ்வகையில் இந்த ஆண்டு இசைத்துறையில் பங்களிப்பு செய்ததற்காக மாதங்கிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.    கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இந்த விருதை மாதங்கிக்கு இளவரசர் வில்லியம்ஸ் பக்கிங்காம் அரண்மனையில் நடந்த விழாவில் வழங்கி உள்ளார்.

இந்த நிகழ்வு குறித்து மாதங்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இந்த விருது எனக்கு மட்டுமின்றி எனது தாயாருக்கும் கிடைத்த கவுரவமாகும்.  அவர் கடந்த 30 ஆண்டுகளாக இந்த விருதைத் தைத்து வழங்கி வருகிறார்.    இந்தப் பணியைக் கடந்த 1986 ஆம் ஆண்டு முதல் எனது தாயாரும் அவர் உறவினரும் செய்து வருகின்றனர்.   இதற்காக மிகக் குறைந்த ஊதியம் பெற்றாலும் அதை எனது தாய் ஒரு பெருமையாகக் கருதி வருகிறார்’ எனப் பதிந்துள்ளார்.