‘கருணை கொலை’ செய்துவிடுங்கள்: குடியரசு தலைவருக்கு இலங்கைதமிழ் இளைஞர் கோரிக்கை-வீடியோ

டெல்லி:

த்தியஅரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்தத்தில், இலங்கை தமிழ்அகதிகள் புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையில், எங்களை ‘கருணை கொலை’ செய்து விடுங்கள் என்று குடியரசு தலைவருக்கு இலங்கை அகதி இளைஞர் ஒருவர் கோரிக்கை வைத்துள்ளார்.

மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவில், பாகிஸ்தான், வங்க தேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய இந்து, சீக்கியர், பவுத்தம், சமணம், பார்சி மற்றும் கிறிஸ்துவ மதத்தினருக்கு குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஆனால்  குறிப்பிட்ட வெளிநாடுகளில் இருந்து வந்த முஸ்லீம் கள் மற்றும் இலங்கை அகதிகள் ஆகியோர் குடியுரிமை சட்ட திருத்த பட்டியலில் இடம்பெற வில்லை. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

சுமார் 35ஆண்டுகளாக ஏராளமான இலங்கை தமிழர்கள்  தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் அகதிகளாக வாழ்ந்து வரும் நிலையில், அவர்களுக்கு குடியுரிமை வழங்குவது குறித்து அறிவிக்காதது கடும் எதிர்ப்பை உருவாக்கி உள்ளது.

இதுகுறித்து கூறியுள்ள  இலங்கை தமிழர்கள், இலங்கையில் இந்திய தமிழர் என்று அடிக்கிறார் கள், இங்கே வந்தால் இலங்கை தமிழர்கள் என்று ஒதுக்குகிறார்கள், எங்கே தான் செல்வது எங்களுக்கு இந்தியாவிலும், குடியுரிமை இல்லையென்றால் எங்களை கடலில் தள்ளிவிடுங்கள் என்று வேதனைகளோடு குமுறி வருகின்றனர்.

இந்த பரபரப்பான நிலையில், இலங்கை அகதி ஒருவர் தலைநகரில், எங்களை கருணை கொலை செய்துவிடுங்கள் என்ற உருக்கமான  பதாதைகளோடு உலாவரும் வீடியோ வைரலாகி வருகிறது.

கடநத 28 ஆண்டுகளாக இந்தியாவில் அகதியாக வாழ்ந்து வரும் தனக்கு குடியுரிமை வழங்க முடியாத என்றால், எங்களை கருணை கொலை செய்துவிடுங்கள் என்று குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.