காணாமல் போன 20000 தமிழர்கள் மரணம் அடைந்துள்ளனர் ;  இலங்கை அரசு ஒப்புதல்

கொழும்பு

லங்கையில் நடந்த உள்நாட்டுப் போர் நேரத்தில் காணாமல் போன 20000 த்மிழர்கள் மரணம் அடைந்துள்ளதை அந்நாட்டு புதிய அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

கடந்த 30  ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் உள்நாட்டுப் போர் நடந்து வந்தது.   இந்த போரில் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் மரணம் அடைந்தனர்.  கடந்த 2009 ஆம் வருடம் நடந்த இறுதிப்போரின் போது மட்டும் சுமார் சுமார் 40 ஆயிரம் தமிழர்கள் மரணம் அடைந்தனர்.  அத்துடன் 20000 தமிழர்கள் காணாமல் போனார்கள்.

இதுவரை இந்த தமிழர்களின் நிலை குறித்து எதுவும் தெரியாமல் இருந்து வந்தது.  உள்நாட்டுப் போரில் காணாமல் போன 20000 தமிழர்களும் இலங்கை ராணுவத்தின் பிடியில் உயிருடன் இருப்பார்கள் என அவர்களின் உறவினர்கள் நம்பி வந்தனர்.   ஆயினும் இலங்கை அரசு இது குறித்து எந்த ஒரு தகவலும் வழங்காமல் இருந்து வந்தது.

தற்போது நடந்த தேர்தலில் கொத்தபாய ராஜபக்சே வெற்றி பெற்று இலங்கை ஜனாதிபதி ஆகி உள்ளார்.   அவர் உள்நாட்டுப் போர் சமயத்தில் பாதுகாப்புச் செயலராக பணியாற்றி வந்துள்ளார்.  கொத்தபாய ராஜபக்சே கொழும்பு வில் நடந்த ஐநா பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்துக் கொண்டார்.

அப்போது கொத்தபாய ராஜபக்சே காணாமல் போனதாகக் கூறப்படும் 20000 தமிழர்கள் மரணம் அடைந்து விட்டதாகத் தெரிவித்துள்ளார்.  மேலும் இது குறித்து விசாரணை நடைபெற உள்ளதாகவும்  விரைவில் அந்த விசாரணை ,முடிந்து மரணம் அடைந்தவர்களின் மரணச் சான்றிதழ் அவர்களின் உறவினர்களுக்கு வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.