கொழும்பு:

பெண் அரசியல்வாதிகளை ஊடகங்கள் பாலியல் ரீதியாக விமர்சிப்பதாக இலங்கை பெண் அரசியல் பிரமுகர் ஜூவனி காரியவசம் குற்றம்சாட்டியுள்ளார்.

இலங்கையில் உள்ள சிலாப நகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஜூவனி காரியவசம் இது குறித்து தெரிவித்துள்ளதாவது:

“ஊடகங்கள் அரசியல்வாதிகளின் அரசியல் செயல்பாடுகள் குறித்து விமர்சிப்பதில் தவறில்லை. ஆனால் பெண் அரசியல்வாதிகளின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்கின்றன. இது மிகவும் தவறான போக்கு ஆகும். பெண்கள் பொதுவாக அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்க இது ஒரு முக்கிய காரணமாக திகழ்கிறது.

அரசியிலில் ஈடுபடும் பெண்களைப் பற்றி அவதூறாக எழுதுவதை நிறுத்த வேண்டும்” என்று ஜூவனி தெரிவித்துள்ளார்.