‘கே.ஜி.எப்’ படத்தை தொடர்ந்து பல மொழிகளில் வெளியாக உள்ளது ‘அவனே ஸ்ரீமன் நாராயணா’….!

‘அவனே ஸ்ரீமன் நாராயணா’ படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என 5 மொழிகளில் வெளியாகிறது.

இப்படத்தில் ரக்‌ஷித் ஷெட்டி ஹீரோவாக நடித்திருக்கிறார். ஹீரோயினாக ஷான்வி ஸ்ரீவட்சவ் நடித்திருக்கிறார். இவர்களுடன் பாலாஜி மனோகர், ப்ரமோத் ஷெட்டி, மதுசூதன் ராவ், அச்சுயுட்குமார், கோபகிருஷ்ண தேஷ்பாண்டே உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

சந்திரஜித் பெல்லியப்பா, அபிஜித் மகேஷ், அனிருத் கோட், நாகர்ஜுன் சர்மா, அபிலாஷ், சச்சின் ஆகியோருடன் சேர்ந்து ரக்‌ஷித் ஷெட்டின் இந்த கதையை எழுத, சச்சின் திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார்.

காம் சவ்லா ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு பி.அஜனீஷ் லோக்நாத் பின்னணி இசையமைக்க, பாடல்களுக்கு பி.அஜனீஷ் லோக்நாத்துடன் இணைந்து சரண் ராஜ் இசையமைத்திருக்கிறார்.