ஹீரோயின் ஆகும் கல்பனாவின் மகள் ஸ்ரீமயி…!

நடிகை ஊர்வசியின் அக்கா கல்பனா குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு வந்து கடைசி வரை நடித்து கொண்டிருந்தார் .கடந்த 2016ம் ஆண்டு மாரடைப்பால் மரணம் அடைந்தார் .

இந்நிலையில் கல்பனாவின் வழியில் அவரின் ஒரே மகள் ஸ்ரீமயி நடிகையாகியுள்ளார். மெஹரூஃப் முத்து இயக்கும் கிஸ்ஸா படம் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமாகிறார் ஸ்ரீமயி.

இது காதலை மையமாக வைத்து எடுக்கப்படும் படம். இதில் அனார்கலி, ஹரிகிருஷ்ணன், சுதீஷ், இர்ஷாத் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். சீனு சித்தார்த் ஒளிப்பதிவு செய்கிறார்.