ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. பழனியின் மனைவி மற்றும் மகளுக்கு கொரோனா தொற்று உறுதி..!

ஸ்ரீபெரும்புதூர் :

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. பழனி ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மனைவி மற்றும் மகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவர்களும்  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது அதிமுகவினரிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலின்  தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.  குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுர்ம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளது.

இந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக நிவாரண உதவிகள் வழங்கி வந்த ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. பழனிக்கு கடந்த வாரம்  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் சென்னையில் உள்ள  தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரை தொடர்ந்து, தற்பொழுது அவரின் மனைவி, மற்றும் மகளுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.  இந்த சம்பவம் அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.