ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏக்கு கொரோனா …

சென்னை:

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. பழனிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது அதிமுக தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில், குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தொற்று பரவல் தீவிரமாகி வருகிறது. நாளுக்கு நாள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது.

இந்த நிலையில்,   ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பழனிக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இதையடுத்து அவர் உடனடியாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண  உதவிகள் வழங்கி வந்த நிலையில், தற்போது அவருக்கு  கொரோனா உறுதியாகி உள்ளது, அதிமுகவினர் மட்டுமின்றி அவரிடம் நிவாரணம் பெற்ற மக்களுக்கும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.