சுரேஷிற்கு ஆதரவாக களம் இறங்கிய நடிகை ஸ்ரீப்ரியா…..!

இரு தினங்களுக்கு முன் பிக்பாஸில் பாதிப்பேர் அரக்கர்களாகவும், பாதிப் பேர் அரசு குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவும் வேடமிட்டு இருந்தனர்.

அந்த டாஸ்க்கின் போது, சுரேஷ் கையில் வைத்திருக்கும் தடியால் தாக்குவதையும். அதன்பின் சனம் மிகவும் கோபமடைந்து பேசுவதையும் காண முடிந்தது.

அதன் பின்னர் பிக்பாஸிடம் சென்று கதறி அழுதார் சுரேஷ் .

இந்நிலையில் சுரேஷிற்கு ஆதரவாக நடிகை ஸ்ரீபிரியா தற்போது பதிவிட்டுள்ளார். அவர் கூறுகையில் ” சுரேஷ் என்ன தவறு வேண்டுமானாலும் செய்து இருக்கட்டும். ஆனால் ஆரஞ்சு பழத்தை கண்ணில் பிழிந்து வெற்றி சூடியது எந்த வகையில் நியாயம். அதேபோல் பலரும் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர்.மற்றவர்களும் அதை பற்றி பேசுவது இல்லை.

அர்ச்சனாவின் அந்த செயலை நான் பாராட்டுகிறேன். ஆனால் திங்கள் முதல் வெள்ளி வரை அவர் ஒரு பிக்பாஸ் மாதிரி சர்வாதிகாரி தொனியில் பேசுவது, சமூக வலைத்தளங்களில் சுரேஷின் பிரபலத்தை பார்த்து பயந்திருக்கலாம். அவர் அதை மென்மையாக கூறியிருக்கலாம். அதேபோல் நியாயமான நபராக இருந்தால், சனம் ஷெட்டியை மன்னிப்பு கேட்க சொல்லியிருக்கலாம். எனக்குத் தெரிந்தவரை தர்மாகோல் ஆயுதங்கள் தான் கையில் கொடுக்கப்பட்டிருக்கும் இரும்பு இல்லை” விஜய் டிவி மேல் தான் தவறு” என்று கூறியுள்ளார்.