துணை முதலமைச்சர் பதவி வேண்டும்: கடவுளுக்கு கடிதம் எழுதிய கர்நாடக பாஜக அமைச்சர்

பெங்களூரு: துணை முதலமைச்சர் பதவி கோரிக்கை பாஜக அமைச்சர் ஒருவர் கடவுளுக்கு கடிதம் எழுதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகாவில் பிஎஸ் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி நடக்கிறது. அதில் சுகாதார அமைச்சராக இருக்கும் ஸ்ரீ ராமுலு, சமீபத்தில் யாதகிரி மாவட்டத்திலுள்ள காடே துர்கா தேவி கோவிலுக்கு சென்று வழிபட்டார்.

அப்போது, கடவுளுக்கு ஒரு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். தமக்கு துணை முதலமைச்சர் பதவி வேண்டும் என்று ஆங்கிலத்தில் அவர் எழுதி உள்ளார். கடவுளுக்கு கோரிக்கை விடுத்து அமைச்சரின் கடிதம் சமூக வலை தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்ற போது அமைச்சர் ஸ்ரீராமுலுவுக்கு துணை முதலமைச்சர் பதவி கிடைப்பது உறுதி என்று கட்சியினர் மத்தியில் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.