ஸ்ரீரங்கம் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற சித்திரை தேரோட்டம்

ஸ்ரீரங்கம்:

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும்  திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் இன்று சித்திரை தேரோட்டம் வெகு விமரிசயாக நடைபெற்றது. ‘ ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா முழக்கத்துடன்  தேரை இழுத்து ஸ்ரீரெங்கநாதனை  தரிசனம் செய்தனர்.

விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர் திருவிழாவானது கடந்த ஒரு வாரமாக  ஸ்ரீரங்கம் நம்பெருமாள் கோயிலில் நடைபெற்று வருகிறது. தினசரி பல்வேறு வாகனங்களில் ஸ்ரீரெங்க நாதர் வீதியுலா வந்த நிலையில், இன்று 9வது நாள் திருத்தேரோட்டம் நடைபெற்று வருகிறது.

இன்று அதிகாலை, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து சீர் வரிசையாக வந்த கிளிமாலையை அணிந்த படி மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்ட நம்பெருமாள் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா… கோவிந்தா என பக்தி பரவசத்துடன் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர்.

சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Chariot procession, Chithirai festival, Srirangam
-=-