Random image

காயங்களையும் பொருட்படுத்தாது, திருச்சானூர் பத்மாவதிக்கு இன்முகத்துடன் பல்லக்கு தூக்கும் ஸ்ரீபாதம்தாங்கிகள்

ஸ்ரீரங்கம்:

புகழ்பெற்ற திருப்பதி அருகே உள்ள திருச்சானூரில் பத்மாவதி தாயார் பிரமோற்சவத்தின்போது,  அம்பாளை பல்லக்கில்  ஊர்வலமாக தூக்கி வருவது ஐதிகம். இந்த பல்லக்கத்தை தூக்க தமிழகத்தின் ஸ்ரீரங்கம் பகுதியில் இருந்து சுமார் 41 பேர் சென்று வருகின்றனர்.

இவர்கள் சாதாரண ஓதுவார்கள் அல்ல… பலர் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உயர் அதிகாரிகளாகவும் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பல்லக்கை தூக்குவதால், அவர்களின் தோளில் சிராய்ப்பு ஏற்பட்டு, காயங்கள் ஏற்படுகிறது. இருந்தாலும், அம்பாளுக்கு செய்யும் சேவையை தங்களது கடமையாக இன்முகத்துடன் செய்து வருகிறார்கள்.

தற்போது திருச்சானூரில் பத்மாவதி  பிரம்மோற்ஸ்வம் பத்து நாட்களாக நடைபெற்ற வருகிறது. . இந்த கைங்கர்யத்தில் தாயாரை எழப்பண்ண அதாவது பல்லக்கு தூக்க கடந்த 27 வருடங்களாக வேத்தாள் என கைங்கர்யபரார்கள்  41பேர் ஸ்ரீரங்கம் பகுதியில் இருந்து சென்றுள்ளனர்.

இவர்களுக்கு பாதம் தாங்கிகள் என்ற பெயரும் உண்டு. பெருமாள் மற்றும் தாயார் இருவரையும் அமர செய்து தோளுக்கினியாள் எனப்படும் பல்லாக்கை சுமப்பதால், இவர்கள்  “ஸ்ரீபாதம்தாங்கிகள்” என்று அழைக்கப்படுகிறாகள்.

கனமான பல்லக்கை சுமக்க  அதிக அளவில் ஆட்கள் தேவைப்படுவதால், கடந்த  27 வருடமாக, பல்லக்கை தூக்கும் சுமைதாங்கிகளை அப்பட்டை ஐயங்கார் நிர்வகித்து வந்தார். .அவர் கடந்த ஆறு மாதம் முன்புதான் மறைந்தார்…இருந்தாலும், இந்த ஆண்டும் ஸ்ரீசுமைதாங்கிகளின் பணி செவ்வனே நடைபெற்று வருகிறது.

நாம் பார்ப்பதற்கு பல்லக்குகள் சாதரணமாக தோன்றினாலும், ஒவ்வொரு பல்லக்கும் நல்ல தரமான மரங்களில் செய்யப்பட்டிருப்பதால், அதன் கனம் அதிகமாகவே இருக்கும்.  ஸ்ரீரங்கம் வாகனங்களில் உள்ள வாரை(கம்பு) யை விட பெரிய மர வாரை திருச்சனுரில் உள்ளது…

இதை தூக்கும் போது, அதை தூக்கும் சுமைதாங்கிளின் நெஞ்சை அழுத்தும் தோளை கிழிக்கும் கொஞ்சம் அசால்ட்டாக இருந்தால் தோள்பட்டை இறங்கி விடும்…

(வாரை அழுத்தி அதாவது மரம் அழுத்தி பட்ட காயங்கள்…)

இருந்தாலும், அவர்கள் அதை தங்களின் பாக்கியமாக கருதி பல்லக்கை சுமந்து வருகிறார்கள். திருச்சானூரில் உள்ள பல்லக்கு ஸ்ரீரங்கத்தை போல் இல்லாத நிலையில், திருசானூரில்  சுவாமி புறப்பாடு என்பது .. பல்லாக்கின் மேலே தாயாருடன் குறைந்தபட்சம் ஆறு பட்டர்கள், பெரிய வாகனங்கள், இரண்டு குடை என புறப்பாடு நடக்கும்…அத்தனை கனத்தையும் சுமக்க வேண்டும்…

ஓரு நாளில் காலை மாலை, இரவு என மூன்று புறப்பாடுகள்…இது இரவு 1 மணிவரை நீடிக்கும்….

மறுபடி மறு நாள் அதிகாலை புறப்பாடாகும்… கொட்டும் மழையானாலும் நனைந்து கொண்டே புறப்பாடு. நடக்கும்… கடந்த இரண்டு நாட்களில் சுமார் ஐம்பாதாயிரம் ஆரத்தி செய்த பக்தர்கள்…. அத்தனை ஆரத்தியுலும் ஒரு நொடி நிறுத்தியே செல்ல வேண்டும்..

இந்த கைங்கர்யபரார்கள் தங்கள் செய்து வரும் அத்தனை வேலைகளையும் ஒதுக்கி வைத்து விட்டு பத்து நாட்கள் தாயார் கைங்கர்யத்துக்காக அங்கேயே தங்கி பிரம்மோற்ஸ்வம் நிறைவான பிறகே ஸ்ரீபாதம் தாங்கிகள் ஸ்ரீரங்கம் திரும்புகின்றனர்..

இந்த ஸ்ரீபாதம்தாங்கிகள்   அத்தனை பேரும் ஏதாவது ஒரு அலுவலகத்தில் பொறுப்பான உயர்ந்த பதவியில் உள்ளவர்கள் அல்லது தனியாக சொந்த தொழில் நடத்தி வருபவர்கள்.

ஆண்டுதோறும் இதற்காக விடுப்பு எடுத்து இந்த கைங்கர்யத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இத்தனை அர்ப்பணிப்பு உணர்வுடன் இதில் ஈடுபட முதல் காரணம் ஆத்ம திருப்தி..

அடுத்து நம்ம தாயார் …வாரை அழுத்திய காயம் தானே ..வேலை தானே, போய்ட்டு போகுது என்ற இதை எல்லாம் மறக்க செய்யும் தாயார் கைங்கர்யம்… காலம் காலமாக செய்து வரும் இவர்களின் இந்த கைங்கர்யம் பாராட்டுக்குரியது..

ஆனால், அவர்களின் மீது உருவாகும் காயங்களை சிலர் விமர்சித்து வருகின்றனர். ஆனால், அவர்கள் அதுபோன்ற பதிவுகளை போட்டு தங்களை இழிவுபடுத்தாதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்…

எங்களுக்கு பல்லக்கு தூக்குவதற்கு தேவையான மனபலத்தை பத்மாவதி தாயாரும் சீனிவாசப் பெருமாளும் அருள்வதுதான் நிஜம் என்கின்றனர்

ஆன்மிக பணிக்காக தங்களை வருத்திக்கொள்ளும் அவர்கள் என்றென்றும் உயர்ந்தவர்கள் என்பதில் மாற்று கருத்துக் கிடையாது..