ஸ்ரீரங்கம் கோயில் கடைகளுக்கு சீல் வைப்பு பணி தொடக்கம்

--

திருச்சி:

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் இருந்த கடைகளில் சில தினங்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல கடைகள் நாசமானதோடு, கோயில் மண்டபமும் சேதம் அடைந்தது. இது பக்தர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியது.

இதை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் உள்ள கடை, ஆக்ரமிப்புகளை அகற்ற முதல்வர் பழனிச்சாமி உத்தரவிட்டார். இந்நிலையில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் கோயில் வளாகத்தில் அகற்றப்படாத கடைகளுக்கு சீல் வைக்கப்படுகிறது.

கோயில் உள்ளேயும் வெளியேயும் உள்ள 53 கடைகளை அகற்ற உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த கடைகளுக்கும் சீல் வைக்கும் பணி தொடங்கியுள்ளது.