ஒரு வருடமாக நான் சுமந்த வலி இன்று பிரசவமாகியுள்ளது – ஸ்ரீரெட்டி

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா பிரபலங்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்திய ஸ்ரீரெட்டி, தெலுங்கான முதல்வர் சந்திரசேகர ராவை பாராட்டி ”தான் ஒரு வருடமாக சுமந்த வலி இன்று பிரசவமாகியுள்ளது” என கூறியுள்ளார்.

தெலுங்கு நடிகைகள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருவதை தொடர்ந்து, ராமமோகன் ராவ் தலைமையில் 25 பேர் கொண்ட குழு ஒன்றை தெலுங்கானா அரசு அமைத்துள்ளது.

தெலுங்கானா அரசின் இந்த அறிவிப்பு குறித்து தனது சமூக வலைதளத்தில் ஸ்ரீரெட்டி, “தெலுங்கானா அரசுக்கு நன்றி, என்னுடைய கனவுகள் இன்று நிஜமாகிவிட்டது. முதல்வர் கே.சந்திரசேகர ராவ் ஒரு ரியல் ஹீரோ என நிரூபித்துவிட்டார். வேசி என அழைக்கப்பட்ட நான் இதன் மூலம் கதாநாயகியாக மாறிவிட்டேன். ஒரு வருடமாக நான் சுமந்த வலி இன்று பிரசவமாகியுள்ளது.” என்று பதிவிட்டுள்ளார்.