Random image

சச்சின் ரொமான்ஸ்!:  ஸ்ரீரெட்டி அதிர்ச்சி பதிவு

துவரை திரை நட்சத்திரங்கள் குறித்து அதிர்ச்சி பதிவுகளை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுவந்த நடிகை ஸ்ரீரெட்டி, தற்போது விளையாட்டு வீரர் சச்சின் டென்டுல்கர் குறித்து பதிவிட்டு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளார்.

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தெலுங்கு துறையில் தன்னை படுக்கைக்கு அழைத்த திரைத்துறை பிரபலங்கள் என்று பலரைப்பற்றி அதிர்ச்சிப் பதிவுகளை சமீபகாலமாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

ஆரம்பத்தில் தெலுங்கு திரை நட்சத்திரங்கள் குறித்து எழுதினார். அப்போது இவர் நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து அரை நிர்வாண போராட்டம் நடத்தி கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

பிறகு தமிழ்த்திரை நட்சத்திரங்கள் சிலர் தன்னிடம் தவறாக நடந்ததாக பதிவிட ஆரம்பித்தார். இதற்கு தமிழ்த்திரை பிரபலங்கள் மறுப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்  சச்சின் டென்டுல்கள் குறித்து குறித்து சர்ச்சையான ட்வீட் ஒன்றை ஸ்ரீரெட்டி பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், “ரொமான்டிக் நபர் என்று அழைக்கப்படும் சச்சின், ஹைத்ரபாத்திற்கு வந்த போது ஒரு அழகான பெண் அவருடன் ரொமான்ஸ் செய்திருந்தார்.

அதற்கு உதவியாக உயரிய பதவியில் உள்ள சாமுண்டீஸ்வரி சாமி தான் தரகராக வேலை பார்த்தார். சிறப்பாக விளையாடும் வீரர் ரொமான்ஸிலும் நன்றாக விளையாடுவாரா?” என்று  ஸ்ரீரெட்டி பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவு மிக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

திரை நட்சத்திரங்களுக்கு இணையாக கிரிக்கெட் நட்சத்திரங்கள் குறித்தும் சர்ச்சைகள் கிளம்புவது உண்டு. ஆனால் இதுவரை எந்தவொரு சர்ச்சையிலம் சிக்காமல் இருந்துவந்தவர் சச்சின். இந்த நிலையில் அவர் குறித்து ஸ்ரீரெட்டி குற்றம் சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.