பிக் பாஸ் : யாஷிகா ஆனந்த் வெளியேற்றம் – ஸ்ரீப்ரியா வருத்தம்

சென்னை

பிக்பாஸ் 2 தொடரில் இருந்து நடிகை யாஷிகா ஆனந்த் வெளியேறியதால் தாம் வருத்தம் அடைந்துள்ளதாக ஸ்ரீப்ரியா தெரிவித்துள்ளார்.

தமிழ் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் ஏற்கனவே ஒளிபரப்பப் பட்டு மிகவும் பிரபலமானது.  தற்போது அந்த நிகழ்வின் சீசன் 2 ஒளிபரப்பாகி வருகிறது.   கமலஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்வு தற்போது இறுதி வாரத்தை எட்டி உள்ளது   இந்த நிகழ்வில் வாரம் ஒருவர் மக்களின் வாக்கை பொறுத்து வெளியேற்றப்படுவார்கள்.

இந்த வாரம் இருவர் வெளியேற்றபடுவார்கள் என கமல் அறிவித்திருந்தார்.  அதன்படி சனிக்கிழமை அன்று இந்த போட்டியில் மிஞ்சி இருந்த ஒரே ஆணான பாலாஜி வெளியேற்றப்பட்டார்.   அடுத்த நாளான நேற்று நடிகை யாஷிகா ஆனந்த் வெளியேறினார்.   இது அவருடைய ரசிகர்களுக்கு மிகவும் கவலையை அளித்துள்ளது.

இது குறித்து நடிகை ஸ்ரீப்ரியா தனது டிவிட்டரில், “ஏற்கனவே விஜய் டிவி சூப்பர் சிங்கரர் போட்டியில் சத்ய பிரகாஷ் வெல்லாத போதும் இம்முறை ஸ்ரீகாந்த் வெல்லாத போதும் என்னை ஏமாற்றி உள்ளது.  திறமையில் நிபுணத்துவம் கொண்டவர் தான் சுப்பர் சிங்கர் இல்லையா<  அதே போல் நான் யாஷிகா வெளியேறியதில் மிகவும் வருத்தம் அடைந்துள்ளேன்.   இதுவும் நான் எதிர்பார்க்காதது” என பதிந்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி