அதிமுக எம்எல்ஏ எஸ்.பி.சண்முகநாதனுக்கு கொரோனா…

சென்னை: அதிமுக எம்எல்ஏ எஸ்.பி.சண்முகநாதனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

தமிழக சட்டமன்ற கூட்டம் வரும் 14ந்தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற உள்ளது. பாதுகாப்பு கருதி, இந்த சபை கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் சமுக விலகளுடன் நடைபெற உள்ளது. முன்னதாக சட்டமன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும், சபாநாயகர், முதல்வர் உள்பட அனைத்து எம்எல்ஏக்கள் மற்றும், சட்டமன்ற ஊழியர்கள், பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
இதில், அதிமுக எம்எல்ஏ  எஸ்.பி.சண்முகநாதனுக்கு தொற்று அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுஉள்ளது. இதையடுத்து, அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
மேல் சிகிச்சைக்காக அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
எஸ்.பி.சண்முகநாதன், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பி னரும், தூத்துக்குடி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளருமாகவும் இருந்து வருகிறார்.