மாதவராவ் மறைவுக்கு, மு.க.ஸ்டாலின்தமிழக கே.எஸ்.அழகிரி இரங்கல்

சென்னை:
திருவில்லிபுத்தூர் காங். வேட்பாளர் மாதவராவ் மறைவுக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மாதவராவ் குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாக மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மேலும், பொது வாழ்வில் ஈடுபடும் அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருக்கவும், தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ளவும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனிடையே, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியும், மாதவராவ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.