இந்தோனேசியாவில் இருந்து புறப்பட்ட விமானம் அடுத்த 4 நிமிடங்களில் திடீர் மாயம்…

ஜகார்தா: இந்தோனேசியாவின் ஜகார்த்தா விமான நிலையத்திலிருந்து,  புறப்பட்ட ஸ்ரீவிஜியா எஸ்.ஜே .182 (Sriwijaya  SJ182)  மாடல் விமானம் புறப்பட்ட  சுமார் 4 நிமிடத்தில் சுமார் 10ஆயிரம் அடி உயரத்துக்கு பறந்தது. அதைத்தொடர்ந்து, அந்த விமானம் தொடர்பை இழந்து  திடீரென மாயமானதாக கூறப்படுகிறது.

இந்த விமானமானது போயிங் 737-500 “கிளாசிக் மாடல் விமானம் என்று கூறப்படுகிறது. இந்த விமானம் கடந்த 1994ம் ஆண்டு முதன்முதலாக இயக்கப்பட்டது என்றும், தற்போது அதன் வயது 26 என்றும் கூறப்படுகிறது.

இந்த விமானத்தில் 50க்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. விமானத்தை தேடும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது