ஷாரூக்கானின் ‘பேய்ப் பட’ போட்டியில கலந்துக்க போறீங்களா ? இதோ விதிமுறைகள்….!

--

கடந்த 2019ஆம் ஆண்டு நெட்ஃப்ளிக்ஸில் இம்ரான் ஹாஷ்மி நடிப்பில் வெளியான ‘பார்ட் ஆஃப் ப்ளட்’ வெப் சீரிஸுக்குப் பிறகு மீண்டும் ஷாரூக் கான் தயாரிக்கும் இரண்டாவது வெப் சீரிஸ் ‘பேடால்’.

இந்த வெப் சீரிஸ் வரும் மே 24ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இந்த வெப் சீரிஸை விளம்பரப்படுத்தும் நோக்கில் நடிகர் ஷாரூக் கான் வளரும் இயக்குநர்களுக்கு ஒரு பேய்ப்பட போட்டியை அறிவித்துள்ளார்.

நாம் இந்த காலகட்டத்தில் நிறைய படங்கள் பார்த்திருப்போம். நம்முள் இருக்கும் இயக்குநரை ஒரு உள்ளரங்கு பேய்ப் படம் எடுக்கவைத்தால் எப்படி இருக்கும்? இதான் போட்டி என கூறியுள்ளார்.

இந்த போட்டிக்கான விதிமுறைகள்:-

கிடைக்கும் எந்த கேமராவையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பயமுறுத்த எந்த பொருளையும் பயன்படுத்தலாம். ஆனால் அந்த பொருள் வீட்டில் தயாராக இருக்கவேண்டும்.

இது ஒரு தனி நபர் திரைப்படமாக இருக்கவேண்டும் அல்லது சமூக இடைவெளியை பின்பற்றி பலரையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

படத்தை மே 18க்குள் அனுப்பவேண்டும்.

வெற்றியாளருடன் ஷாரூக் கான், மற்றும் ‘பேடால்’ படக்குழுவினர் வீடியோ காலில் பேசுவார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.