லண்டனின் முக்கிய சுற்றுலாத் தளமாக லெஸ்டர் ஸ்கொயர் பகுதி விளங்குகிறது. இங்கு ‘சீன்ஸ் இன் தி ஸ்கொயர்’ என்கிற பெயரில் பிரபல திரைப்படக் காட்சிகள், நடிகர்கள், கதாபாத்திரங்களின் சிலைகள் இடம்பெற்றுள்ளன.
இந்த வரிசையில் நீண்ட காலமாக திரையரங்கில் ஓடிய திரைப்படம் என்கிற சாதனையைப் படைத்திருக்கும் ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே’ திரைப்படத்தின் சிலையும் நிறுவப்படவுள்ளது. ஷாரூக் கான் மற்றும் கஜோலின் சிலைகள் இதில் இடம்பெறவுள்ளன.
இந்தத் திரைப்படம் வெளியாகி இது 25-வது வருடம் என்பதும், படத்தைத் தயாரித்த யாஷ் ராஜ் ஃபிலிம்ஸுக்கு இது துறையில் 50-வது வருடம் என்பதும் குறிப்பிடத்தக்கது.