பெண் ஒருவருடன் திருப்பூரில் ரகசிய அறையில் பதுங்கி இருந்த வேந்தர் மூவிஸ் மதன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை எஸ்ஆர்எம் மருத்துவ பல்கலை கழகத்தில் மருத்துவ சீட் வாங்கித் தருவதாக ரூ80 கோடி வசூலித்து மோசடி செய்தார்,  மதன் என்பது குற்றச்சாட்டு எழுந்தது.

வேந்தர் மூவிஸ் மதன்
வேந்தர் மூவிஸ் மதன்

இதையொட்டி கடந்த மே மாதம் எஸ்ஆர்எம் குழும தலைவர் பச்சமுத்துவிடம், தான்  வசூலித்த பணத்தை கொடுத்துவிட்டதாக கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு மாயமானார் மதன்
கடிதத்தில் கங்கையில் மூழ்கப் போகிறேன் என்று எழுதப்பட்டிருந்ததால் மதன் காணாமல் போன விவகாரம் பரபரப்பு அடைந்தது.
எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்துவின் பினாமிதான் வேந்தர் மூவிஸ் மதன் என்று கூறப்பட்டது. ஆகவே மதன் மாயமானது குறித்து பச்சமூத்துவிடமும் விசாரணை செய்ய வேண்டும் என்று அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். அது தொடர்பாக வழக்கும் தொடரப்பட்டது.
 
இதைத்தொடர்ந்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.  காணாமல் போன வேந்தர் மூவிஸ் மதன் உயிருடன் இருக்கிறாரா? இல்லை கூலிப்படையினரால் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார்  தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.  அவரைக் கொன்று எரித்து விட்டதாக கூட செய்திகள் வெளியாகின.
இதனையடுத்து மதன் எங்கே என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பல வழக்குகள் மதன் குடும்பத்தினரும், பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் சார்பாகவும் தொடரப்பட்டன. மதனின் தாயார் தங்கமும் ஆட்கொணர்வு வழக்கும் தொடர்ந்தார்.
மதன் தாயார் - மனைவி
மதன் தாயார் – மனைவி

இதைத்தொடர்ந்து மதனை கைது செய்ய ஆஜர்படுத்த போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கெடு விதித்தது.
போலீசார் விசாரணையில் மதன் உயிருடன் இருப்பது தெரியவந்துள்ளது. அவர் உ.பி. மாநிலம் பபத்பூர் விமான நிலையத்திலிருந்து போலீஸ் பிடியில் சிக்காமல் தப்பிய விவரம் பின்னர் தெரிய வந்தது. அதையடுத்து வட மாநிலங்களில் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் வடமாநில பிரபல பத்திரிகையின் நிருபர் ஒருவர், மதன் மணிப்பூரில் கைது செய்யப்பட்ட தாக தகவல் வெளியிட்டுள்ளார்.
திருப்பூருக்கு முன்னதாக மணிப்பூரில் மதன் பதுங்கியிருந்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது.
ஆனால், சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், மதன் திருப்பூரில் தங்கியிருந்தபோது கைது செய்ததாக தெரிவித்து உள்ளார்.
SRM பச்சமுத்துவுடன் மதன்
SRM பச்சமுத்துவுடன் மதன்

இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் கூறியதாவது,
கோவை அருகே உள்ள  திருப்பூரில் பெண் ஒருவருடன் ரகசிய அறையில் பதுங்கி இருந்த மதனை சென்னை போலீசார் இன்று கைது செய்தனர் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மதன் மனிப்பூரில் கைது செய்யப்பட வில்லை என்றும் திருப்பூரில்தான் கைது செய்யப்பட்டார் என்று கூறினார்.
மதனுக்கு இன்று 44வது பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.
மதன் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்ததும், மதன் தரப்பு வழக்கறிஞர் இன்பெண்ட் தினேஷ் கூறியதாவது,
 
மதனை உனடியாக நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த தற்போது உயர்நீதிமன்ற நீதிபதியிடம் முறையீடு செய்ய உள்ளதாக  தெரிவித்தார். மேலும்,
மதன் கைது குறித்து போலீசார் எங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவரை உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தக்கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்ய உள்ளோம் என்று கூறினார்.
மதன் கைது குறித்து போலீஸ் கமிஷனர் அறிவித்தபோது
மதன் கைது குறித்து போலீஸ் கமிஷனர் அறிவித்தபோது

மதன் காணாமல் போன விஷயத்தில் போலீசார் கண்ணா மூச்சு ஆடுவதாக கூறப்பட்டது. தற்போது அவர் கைது விஷயத்திலும் கண்ணாமூச்சு ஆடுகிறார்களோ என்ற சந்தேகம் பொதுமக்களிடம் எழுந்துள்ளது.