எஸ்ஆர்எம் குழுமம் இலவச கல்வி: சான்றுகளை சமர்பிக்கத் தயாரா?

சென்னை

எஸ்ஆர்எம் குழுமம் மூலமாக ஆண்டு 2500 பேருக்கு இலவச கல்வி அளிப்பதாக கூறியுள்ளது. அதுகுறித்த சான்றுகளை அளிக்க தயாரா? என்று கல்வி கட்டண கொள்ளைக்கு எதிரான அமைப்பு கேள்வி எழுப்பி உள்ளது.

எஸ்ஆர்எம்  கல்விக் குழுமங்கள் மூலம் ஆண்டுதோறும் இரண்டாயிரத்து 500 பேருக்கு இலவச கல்வி அளிப்பதாக கூறியுள்ளார் எஸ்ஆர்எம்  பல்கலைக்கழக பதிவாளர்.  இது குறித்த்  ஆதாரங்களை சமர்ப்பிக்கத் தயாரா? என கல்விக் கட்டணக் கொள்ளைக்கு எதிரான அமைப்பு சவால் விடுத்துள்ளது.

1srm-310x205 1kalvi

இதுதொடர்பாக கல்விக் கட்டணக் கொள்ளைக்கு எதிரான அமைப்பைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஆயிரம் ரூபாய் முதலீட்டில் 25 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட வள்ளியம்மை சொசைட்டி தான், 25 லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துக்களை சேர்த்துள்ளது என்பதற்கு ஆதாரமாக, வள்ளியம்மை Trust Deed ஆவணத்தை தங்களின் இணையதளத்தில் வெளியிட்டுள்ளதாக பதிவாளர் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், ஆண்டுதோறும் இரண்டாயிரத்து 500 பேருக்கு இலவச கல்வி வழங்குவதாக கூறும்க எஸ்ஆர்எம்  ல்விக் குழுமம், இதன் மூலம் தவறான கணக்கு எழுதி பணம் கையாடல் செய்கிறது என்ற சந்தேகமும் தங்களுக்கு எழுவதாக கல்விக் கட்டணக் கொள்ளைக்கு எதிரான அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

எனவே, ஒவ்வொரு ஆண்டும் எஸ்ஆர்எம்   கல்விக் குழுமத்தில் இலவச கல்வி பெற்ற மாணவர்களின் பட்டியலை பெயர் மற்றும் முகவரியுடன் வெளியிடத் தயாரா? எனவும் அந்த அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

பொதுவாக எஸ்ஆர்எம்   கல்விக் குழுமத்தில், ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் நீதித்துறையில் உள்ள நபர்கள் தவிர வேறு யாருக்கும் எஸ்ஆர்எம்  ல்விக் குழுமத்தில் இலவச கல்வி வழங்கப்படுவது இல்லை என்றும் கிருஷ்ணமூர்த்தி குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், பொறியியல் படிப்புகளுக்கு அரசின் சார்பில் 45 ஆயிரம் ரூபாய் கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டாலும், பல்வேறு விதங்களில் மாணவ, மாணவிகளிடம் இருந்து நான்கரை லட்சம் முதல் ஏழு லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாகவும் எஸ்ஆர்எம்   கல்விக் குழுமத்தின் மீது கல்விக் கட்டணக் கொள்ளைக்கு எதிரான அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

 

கார்ட்டூன் கேலரி