எஸ்ஆர்எம்:  ரூ.69 கோடி திருப்பி தருகிறோம்!  போலீஸ், பெற்றோருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

சென்னை:

எஸ்ஆர்எம் மெடிக்கல் காலேஜில் மருத்துவ சீட் வாங்கி தருவதாக, எஸ்ஆர்எம் குழும தலைவர் பச்சமுத்துவின் நண்பர் மதன் பல மாணவர்களிடம் ரூ.69 கோடி ரூபாய் வசூலித்துவிட்டு, மாணவர்களிடம் பெற்ற பணத்தை பச்சமுத்துவிடம் ஒப்படைத்து விட்டதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு  தலைமறைவானதும் தெரிந்ததே.

102 மாணவர்களிடம் பணம் வாங்கியதாகவும், மொத்தம் 69 கோடி ரூபாய் வசூலித்ததாகவும் தகவல்கள் வெளியானது. பணம் கொடுத்தவர்களில் 14 பேர்  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

son and father

மாணவர்கள் தொடர்ந்த வழக்கை அடுத்து எஸ்ஆர்எம் குழும தலைவர் பச்சமுத்துவிடம் இரண்டு நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது. அதை அடுத்து அவர்  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இன்று காலை சென்னை ஐகோர்ட்டில் பச்சமுத்துவின் சார்பில் மகன் ரவி பச்சமுத்து ஒரு மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், மாணவர்களிடம் வசூலித்த் ரூ.69 கோடி பணத்தை திருப்பி தந்துவிடுகிறோம் என்றும், பச்சமுத்துவை விடுதலை செய்யுங்கள் என்றும் ரவி கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

இந்த மனுவுக்கு, ரூ.69 கோடியை திருப்பி தருவதாக ரவிபச்சமுத்து மனுவுக்கு பதில் தர போலீசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. மாணவர்களின் பெற்றோரும் பதில் தர நீதிபதிகள் நாகமுத்து, பாரதிதாசன் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி