எஸ்.ஆர்.எம். பச்சமுத்து – மதன் வழக்கு சூடு பிடிக்கிறது! முக்கிய நபர்கள் பலரிடம் விசாரணை!

சென்னை:

ஸ்.ஆர்.எம். கல்விக்குழுமத்தின் கீழ் செயல்படும் மருத்துவக்கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாகச் சொல்லி பலரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததா, வேந்தர் மூவிஸ் அதிபர் மதன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அவர் தலைமறைவானார்.

பச்சமுத்து - மதன்
பச்சமுத்து – மதன்

இது குறித்து வழக்கு பதியப்பட்டது. ஐந்து மாதங்களுக்கு மேல் தலைமறைவாக இருந்த மதனை காவல்துறையினர் கைது செய்தனர். தற்போது மதனை போலீஸ் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

அவர் பல முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளதாக  கூறப்படுகிறது. இதையடுத்து வழக்கில் தொடர்புள்ளவர்கள் என்று கருதும் முக்கிய நபர்கள் காவல்துறையினர் அழைத்து விசாரித்து வருகின்றனர்.

ஏற்கெனவே திரைப்பட தயாரிப்பாளர் தாணு உட்பட சிலரை காவல்துறையினர் அழைத்து விசாரித்தனர். பிறகு அம்மா  கிரியேசன்ஸ் சிவா,  பாலகுரு, உள்ளிட்ட ஐந்து பேரை அழைத்து விசாரித்தார்கள்.

எஸ். ஆர். எம். பல்கலையின் பதிவாளர் சேதுராமனும் இன்று, மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன் ஆஜராஜனார்.  அவரிடம் கட்டாய நன்கொடை குறித்து விசாரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் திரைப்பட பிரமுகர்கள், பச்சமுத்துவின் ஐ.ஜே.கே. கட்சியின் சில நிர்வாகிகள், எஸ்.ஆர்.எம். கல்லூரியின் முக்கிய நிர்வாகிகள் என இருபது முக்கிய பிரமுகர்களை அழைத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் அழைப்பு விடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கார்ட்டூன் கேலரி