சென்னை,

எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த பொறியியல் பட்டதாரி மாணவர் ஒருவர் திடீரென தற்கொலை செய்துகொண்டார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் ஏதும் நடைபெறாத வகையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்து வந்த ஆந்திராவை சேர்ந்த  சாய் நிதின் என்ற மாணவர் கடந்த திங்கட்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் மாடியில் இருந்து குதித்து  தற்கொலை செய்துகொண்டார் இது மாணவர்களிடையே பரபரபப்பை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக மாணவர்கள் போராட்டத்தில் குதிக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையை அடுத்து செங்கல்பட்டு அருகே உள்ள காட்டாங்கொளத்தூரில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு எஸ்ஆர்எம் பொறியியல் கல்லூரி, மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை உள்பட பல்வேறு கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த பல்கலைக்கழகத்தில் வெளி மாநிலங்களை சேர்ந்த மாணவர்களே அதிக அளவில் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், பொறியியல் இறுதியாண்டு படித்து வந்த சாய்நிதின் என்ற ஆந்திர மாநிலத்தை சேர்ந்த  21 வயதான மாணவர் விடுதி கட்டித்தின் மாடியில் இருந்த குதித்து தற்கொலை செய்துகொண்டார். இது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து,  அவரது உடல் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்,

இதுகுறித்து காஞ்சிபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் கூறியதாவது,

கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற தேர்வின்போது, சாய் நிதின் பிட் அடிக்க முயன்றபோது, பிடிபட்டதாகவும், அதைத் தொடர்ந்து, அவரது மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த தகவ்ல அவரது குடும்பத்தினருக்கு தற்போதுதான் தெரிய வந்துள்ளது. அவர்கள் அது குறித்து நிதினிடம் விசாரித்து உள்ளனர்.

இதனால்,  அவமானமடைந்த நிதின், தற்கொலை முடிவை எடுத்துள்ளார் என்றும், அவரது அறையில் சோதனை யிட்டதில், அவர் தற்கொலை செய்ததற்கான  வேறு எந்தவித முகாந்திரமும் கிடைக்கவில்லை என்றும், இந்த தற்கொலை  வேறு யாரும் புகார் கொடுக்கவில்லை என்றும் கூறினார்.

மேலும்,  சமீபத்தில், சத்தியபமா பல்கலைக்கழ கத்தில்,  மாணவர் தற்கொலை செய்துகொண்டதால் வன்முறை வெடித்து பெரும் சேதம் ஏற்பட்டது.   அதன் காரணமாக அதுபோன்ற எந்தவொரு வன்முறையும்  ஏற்படாத வகையில் பாதுகாப்புக்காக சுமார் 200 போலீஸ்காரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறினார்.

இறுதியாண்டடு படித்து வந்த மாணவர் திடீரென தற்கொலை செய்தது, மற்ற மாணவர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அதையடுத்து கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராக அவர்கள் போராட்டத்தில் குதிக்கக்கூடும் என்பதால், பல்கலைக்கழக வளாகத்தில் போலீசாரை குவித்து வருகிறது எஸ்ஆர்எம் பல்கலைக்கழக நிர்வாகம்.