எஸ்.ஆர்.எம். பல்கலையில் மாணவர் மர்ம மரணம்!

சென்னை:

எஸ்ஆர்எம் பல்கலைக்கழக விடுதியில் மாணவர் ஒருவர் மர்மமாக மரணம் அடைந்தது அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.

download

எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்கும் மாணவர் லோகேஷ் குகன் (வயது 19). திருப்பூரை சேர்ந்த இவர் பல்கலைக்கழக விடுதியில் சக மாணவர்களான அகில், பாஸ்கர் ஆகியோருடன் ஒரே அறையில் தங்கியிருந்துள்ளார். இந்த நிலையில்,  ஆயுத பூஜை விடுமுறைக்கு மாணவர்கள் அனைவரும் அவரவர் சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தனர்.

a

விடுமுறை முடிந்து, கடந்த சனிக்கிழமையன்று விடுதிக்கு குகன் திரும்பியுள்ளார்.

இந்த நிலையில் குகன் அறையில் தங்கியிருக்கும் இன்னொரு மாணவரான பாஸ்கர், அறைக்குத் திரும்பினார். அறைக்கதவு உட்புறம் தாழிடப்பட்டிருந்தது.   உள்ளிருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அதிர்சியடைந்த அவர்,   விடுதி காப்பாளருக்கு தகவல் தெரிவித்தார்.

விடுதிக்காப்பாளரும் வந்த பிறகு  அறையின் ஜன்னல் வழியே பார்த்துள்ளனர். அங்கு, குகன் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார். இதனால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தொடர்ந்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் வந்து அறையின் கதவை உடைத்து குகனின் உடலை மீட்டனர்.

குகன் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு எந்தவித காரணமும் இல்லை என்ற் அவரது குடும்பத்தினர் தெரிவிக்கிறார்கள்.

எஸ்.ஆர்.எம். பல்கலை விடுதியில் மாணவர் மர்ம மரணம் அடைந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.