‘தெறி’ தெலுங்கு ரீமேக்கில் ஸ்ருதி ஹாசன்….!

வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து 2016-ம் ஆண்டு வெளிவந்த படம் ‘தெறி’. இந்தப் படம், 75 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டு, 175 கோடி ரூபாய் வசூல் செய்தது.

இந்தப் படம், தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு அப்போது வெளியானது. இருந்தாலும், தெலுங்கில் இந்தப் படத்தை ரீமேக் செய்ய உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், ஹீரோயினாக ஸ்ருதி ஹாசன் நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மது தயாரிக்கும் இந்தப் படத்தை, கோபிசந்த் மாலினேனி இயக்குகிறார். விஜய் கதாபாத்திரத்தில் ரவி தேஜா நடிக்கஉள்ளார் .

கார்ட்டூன் கேலரி