பிங்க்’ தெலுங்கு ரீமேக்கின் மூலம் மீண்டும் திரையுலகிற்குத் திரும்பியுள்ளார் பவன் கல்யாண்.இந்தப் படத்தில் அமிதாப் பச்சன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பவன் கல்யாண்.

ஸ்ரீராம் வேணு இயக்கி வரும் இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார் .
இதில் நிவேதா தாமஸ், அஞ்சலி உள்ளிட்டோர் பவன் கல்யாணுடன் நடித்துள்ளனர். ‘வக்கீல் சாப்’ என்று பெயரிடப்பட்டுள்ள தெலுங்கு ரீமேக்கின் ஃபர்ஸ்ட் லுக் இணையத்தில் பெரும் வைரலானது.

தற்போது இந்தப் படத்தில் பவன் கல்யாணுக்கு மனைவியாக சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஸ்ருதி ஹாசன். தமிழில் இந்த கதாபாத்திரத்தில் வித்யாபாலன் நடித்திருந்தார் .