பறை இசை பயிலும் ஸ்ருதி ஹாசன்…!

 

தான் பறை இசை பயிலும் வீடியோவினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஸ்ருதி ஹாசன் .

சமீப காலமாக பறை (தமிழ்நாடு மற்றும் இலங்கையில் பயன்படுத்தப்படும் ஒரு இசைக்கருவி) வாசிப்பை பழகி வருகிறார் ஸ்ருதி என தகவல்கள் வந்தன.

அதை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் Gotta get back to this !!!(இந்த விஷயத்தைத் திரும்பப் பெற வேண்டும் !!!) என்ற தலைப்பில் ஸ்ருதி பகிர்ந்துள்ள இந்த வீடியோ 625 ஆயிரம் பார்வையாளர்களை தற்போது வரையில் பெற்றுள்ளது.

அழிவின் விளிம்பில் இருக்கும் ஒரு கலையை மாஸ்டரிங் செய்ததற்காக அவரது ரசிகர்கள் பலர் அவரைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.