விஜய்யின் மாஸ்டர்’ படம் ரிலீசுக்கு தயாராகியிருந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் வெளியாகாமல் இருக்கிறது .
இந்த நிலையில் விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது
இது விஜய்யின் 65 ஆவது படம் ஆதலால் ‘தளபதி 65’ என தற்காலிகமாக அழைக்கப்படும். தற்போது இந்த படத்தின் இசையமைப்பாளர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது அது வேறு யாரும் இல்லை பிரபல இசையமைப்பாளர் தமன் தான் அது.
இசையமைப்பாளர் தமன் இசையமைப்பில் அல்லு அர்ஜூனின் அல வைக்குந்தபுரம்லோ பட பாடல்கள் சூப்பர் ஹிட்டானது. குறிப்பாக இந்த படத்தில் இடம் பெற்ற புட்டபும்மா என்ற பாடல் யூடியூபில் மாஸ் ஹிட் குடுத்தது .
இதனையடுத்து விஜய்யுடன் தமன் இணைந்துள்ளதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு இப்பொழுது அதிகரிக்க தொடங்கியுள்ளது.