மாதவனின் ‘மாறா’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் இணையும் ஷிவதா…!

‘ராக்கெட்ரி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் புதிய படமொன்றில் நடிக்கத் தொடங்கியுள்ளார் மாதவன். ‘மாறா’ எனத் தலைப்பிட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

2015ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான சார்லி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இயக்குநர் மார்ட்டின் பிரக்கத் இயக்கத்தில் துல்கர் சல்மான், பார்வதி, அபர்ணா கோப்நாத், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தின் ரீமேக் தான் இந்த ‘மாறா’.

இந்த படத்தில் மாதவனுக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்து வருகிறார். மலையாளத்தில் பார்வதி பண்ண டெசா கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்து வருகிறாராம்.

இந்நிலையில் இப்படத்தில் ஷிவதா இணைந்துள்ளார். நெடுஞ்சாலை, அதே கண்கள் உள்ளிட்ட படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ஷிவதா மாதவனின் மாறா படத்தில் டாக்டர் ரோலில் நடித்து வருகிறாராம்.