சென்னை:

மிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை  (29ந்தேதி) வெளியாவதாக தமிழக தேர்வுத்துறை அறிவித்து உள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 14ம் தேதி தொடங்கி மார்ச் 29ம் தேதி முடிவடைந்தது. மொத்தம்  12 ஆயிரத்து 546 பள்ளிகளைச் சேர்ந்த 9 லட்சத்து 60 ஆயிரம் மாணவ- மாணவிகள் மற்றும் 38 ஆயிரம் தனித் தேர்வர்கள் தேர்வை எழுதி உள்ளனர்.

இந்நிலையில் தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவ மாணவிகள் தங்களது தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

www.tnresults.nic.in,

www.dge1.tn.nic.in

www.dge2.tn.nic.in என்ற இணையதளங்கள் மூலமும் மதிப்பெண்களை மாணவர்கள் தெரிந்து
கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள், மாணவர்கள் ஏற்கெனவே வழங்கிய கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வில் வெற்றிபெறாதவர்கள், உடனடி  நடத்தப்படும் தட்கல் முறையிலான  தேர்வை மீண்டும் எழுதலாம் என்றும் இந்த தேர்வு ஜூன் மாதம் முதல் வாரத்தில்  நடைபெறும் என்றும்  தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை  அறிவித்துள்ளது.

மேலும், மாவட்ட வாரியாக ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள தகவல் மையங்களிலும் அனைத்து நூலகங்களிலும் மாணவர்கள் படித்த அந்தந்த பள்ளிகளிலும் மதிப்பெண்களை தெரிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.