பி எஸ் என் எல் அலுவலகத்தில் நுழைந்த கரடி : ஊழியர்கள் ஓட்டம்

--

ரீம் நகர், தெலுங்கானா

தெலுங்கானா மாநிலம் கரீம் நகரில் உள்ள பி எஸ் என் எல் அலுவலகத்துக்கு ஒரு கரடி நுழைந்ததால் ஊழியர்கள் ஒட்டம் பிடித்தனர்.

தெலுங்கானா மாவட்டத்தின் முக்கிய நகர்களில் கரீம் நகரும் ஒன்றாகும்.   இங்குள்ள பேருந்து நிலையம் அருகே பி எஸ் என் எல் அலுவலகம் அமைந்துள்ளது.  இங்கு சுமார் 100 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி புரிந்து வருகின்றனர்.    இந்தப் பகுதி திருப்பதி திருமலை வனப்பகுதியை ஒட்டியதாகும்.

நேற்று காலை இந்த அலுவலகத்துக்குள் ஒரு கரடி வனப்பகுதியில் இருந்து வழிமாறி உள்ளே நுழைந்து விட்டது.    அதைக் கண்ட அலுவலக ஊழியர்கள் பயந்து போய் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.    தகவல் ஊரெங்கும் பரவவே பொதுமக்களும் கரடியைக்  காண ஏராளமாக குவிந்துள்ளனர்.   காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

அதை ஒட்டி காவல் துறையினர் அங்கு விரைந்து சென்று கரடியை பிடிக்க முயன்றனர்.     அவர்களால் கரடியை பிடிக்க முடியாமல் வாரங்கலில் உள்ள வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது.   அவர்களும் பலவாறு முயன்றும் நேற்று மாலை வரை கரடியை பிடிக்க முடியவில்லை.   தற்போது கரடி பிடிபட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

You may have missed