லோகேஷ் – சந்திரபாபு நாயுடு

ஐதராபாத்:

தி.மு.க., காங்கிரஸ், சமாஜ்வாதி, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி,  என பல கட்சிகளில், அக்கட்சி தலைவர்களின் மகன்களுக்கு முக்கிய பொறுப்புகள் அளிக்கப்பட்டது வரலாறு.

இதே போல தற்போது ஆந்திராவில் ஆளும் தெலுங்கு தேசக் கட்சித் தலைவரும் முதல்வருமான சந்திரபாபு நாயுடு, தன் மகனுக்கு அமைச்சர் பதவியை கொடுக்க முடிவு செய்துள்ளார்.

இவரது மகனான லோகேஷ், நீண்டகாலமாகவே, குடும்ப வியாபாரத்தை கவனித்து வருகிறார். 2013ல் வெளிப்படையான அரசியலுக்கு வந்த அவர், கட்சியின் இளைஞர் அணித் தலைவராக நியமிக்கப்பட்டார். தற்போது கட்சியின் பொதுச் செயலராக உள்ளார்.

நவீன தொழில்நுட்பங்களில் சந்திரபாபுவை போலவே அவரது மகனும் நாட்டமுள்ளவர். கடந்த சட்டசபை தேர்தலில் நவீன யுக்திகளை பயன்படுத்தி கட்சியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.