டிச 4-ல் கஜா பாதிப்புகளை மீண்டும் பார்வையிடும் ஸ்டாலின்

சென்னை:

ஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் நிவாரண பணிகள் குறித்து தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மீண்டும் பார்வையிடுகிறார்.

கடந்த 16ந்தேதி அதிகாலை தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் உள்பட பல மாவட்டங்களில் கஜா புயல்  பேரழிவை ஏற்படுத்தி சென்றது. புயல் பாதித்த இடங்களில் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகிறது.

புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை கடந்த 17ந்தேதி மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். நாகை மாவட்டம் தரங்கம்பாடியில்  மீனவர்களிடம் அவர் குறைகளை கேட்டார்.  சேதமான படகுகளை அவர் பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து வேதாரண்யம், தஞ்சை  உள்பட பல பகுதிகளில் பார்வையிட்டு நிவாரண உதவிகள் வழங்கினார்.

இந்த நிலையில் வரும் (டிசம்பர்) 4ந்தேதி மீண்டும் திருவாரூ மாவட்டம் சென்று கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்கிறார்.