எம் ஜி ஆர் நூற்றாண்டு விழாவில் எதிர்கட்சி தலைவர்கள் பங்கேற்பு : மாஃபா பாண்டியராஜன்

சென்னை

எம் ஜி ஆர் நூற்றாண்டு விழாவுக்கு எதிர்கட்சி தலைவர்களான ஸ்டாலின் மற்றும் டீடிவி தினகரன் நிச்சயம் கலந்துக் கொள்வார்கள் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறி உள்ளார்.

எம் ஜி ஆர் நூற்றாண்டு விழா தமிழக அரசின் சார்பில் கடந்த ஒரு வருடமாக கொண்டாடப்பட்டு வருகிறது.   இதன் நிறைவு விழா சென்னையில் நடைபெற உள்ளது.   இதற்கான அழைப்பிதழ் தற்போது வெளியாகி உள்ளது.   அதில் எதிர்க்கட்சி தலைவர்கள் பெயர் இடம் பெற்றிருந்தது பரபரப்பை உண்டாக்கியது.

இது குறித்து தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், “எம் ஜி ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் மற்றும் அமமுக தலைவர் டிடிவி தினகரன் ஆகியோர் வந்து கலந்துக் கொள்வார்கள் என நான் நம்புகிறேன்.   அதனால் அவர்கள் பெயர் அழைப்பிதழில் இடம் பெற்றுள்ளது.” என தெரிவித்துள்ளார்.