வீட்டில் ஓய்வுவெடுத்து வரும் திமுக பொதுச்செயலாளர் அன்பழகனிடம் நேரில் நலம் விசாரித்த ஸ்டாலின்….

சென்னை:

டல் நலம் பாதிப்பு காரணமாக சென்னை அப்போலோவில் 1 மாதம் சிகிச்சை பெற்று கடந்த மாதம் (ஜனவரி)  28ந்தேதி வீடு திரும்பினார்.

இந்த நிலையில், வீட்டில் ஓய்வெடுத்து வரும் அன்பழகனை திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட திமுக மூத்த நிர்வாகிகள் நேரில்  சந்தித்து நலம் விசாரித்தனர்.

வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட திமுக பொதுச்செயலாளர் அன்பழகன், சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த ஆண்டு (2018) டிசம்பர் 28ந்தேதி  அனுமதிக்கப் பட்டார். அங்கு சுமார் 1 மாதம் சிகிச்சை பெற்ற நிலையில், ஜனவரி மாத இறுதியில் வீடு திரும்பினார்.

வீட்டில்   ஓய்வு எடுத்து வரும் திமுக பொதுச் செயலாளர்  அன்பழகனை யாரும் சந்திக்க செல்ல வேண்டாம் என்று திமுக தலைமை அறிவுறுத்தி இருந்தது.

இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, பொன்முடி ஆகியோர் அன்பழகன் இல்லத்திற்கு இன்று நேரில் சென்று அவரிடம் விசாரித்தனர்.

இந்த தகவலை முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேரு புகைப்படத்துடன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.