சென்னை:

சட்டமன்றத்தில் திமுக வெளியேற்றம், ரகசிய வாக்கெடுப்புக்கு மறுப்பு உள்ளிட்டவற்றை கண்டித்து எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் மெரினா காந்தி சிலை முன் உண்ணாவிரதம் இருந்தனர்.

அங்கு திமுக.வினர் அதிகளவில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நேரம் செல்ல செல்ல உண்ணாவிரத தகவல் அறித்து திமுக.வினர் அதிகளவில் குவிந்தனர். இதனால் போலீசார் அங்கு விரைந்து வந்து ஸ்டாலினை கைது செய்தனர். எம்எல்ஏ.க்களையும் கைது செய்வதாக அறிவித்தனர்.

ஆனால் அங்கு குவிந்திருந்த திமுகவினர் போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டதால் வாகனம் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் பலர் போலீஸ் வாகனத்தின் மீது ஏறி நின்று போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து கடும் போராட்டத்திற்கு பிறகும், பேச்சுவார்த்தை நடத்தி ஸ்டாலினை அழைத்துச் சென்றனர்.இதையடுத்து மெரினாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.