துணைவேந்தர் அதிகாரத்தில் கவர்னர் தலையீடு…தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியா?: ஸ்டாலின் கேள்வி

சென்னை:

துணைவேந்தர் அதிகாரத்தில் கவர்னர் தலையிடுவது தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி நடைபெறுகிறதா என சந்தேகம் எழுந்துள்ளது என்று தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் கூறி உள்ளார்.

இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி நடைபெறுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. பேராசிரியை நிர்மலாவின் தொலைபேசி உரயை£டல் மூலம் தங்களது பிள்ளைகள் குறித்து பெற்றோர் அச்சப்படும் நிலை உருவாகியுள்ளது.

பெண் நிருபர் கண்ணத்தில் கவர்னர் பன்வாரிலால் தட்டிய சம்பவம் துரதிருஷ்டவசமானது மட்டுமல்ல. அரசியல்சட்ட பதவியில் இருப்பவருக்கு துளியும் தகுதியில்லாதது’’ என்றார்.